வாஷிங்டன்
இந்திய குடியுரிமை பெற்ற ஒரு பெண் பொறியியலாளருக்கும் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த பெண் மென்பொருள் பொறியாளர் சுதா சுந்தரி நாராயணன் கலந்து கொண்டார்.
அதிபர் டிரம்ப் முன்னிலையில், அவர் அந்த நாட்டின் குடிமகனாக உறுதி செய்யப்பட்டார். டிரம்ப் அவருக்கு யு.எஸ். குடியுரிமை சான்றிதழ் வழங்கினார். இது அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்வில் பேசிய டிரம்ப், இந்திய பெண் சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான மென்பொருள் உருவாக்குநர். யு.எஸ். குடிமக்களாக, யு.எஸ். சட்டத்தை பின்பற்றுமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டார்.